மும்பை:

காராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனைக் கட்சியின் 50க்கு 50 அதிகாரப்பகிர்வு வேண்டுகோளால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, மாநில ஆளுநரை இரு தரப்பினரும் தனித்தனியாக சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

288 தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. எந்தவொரு தனிக்கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், பாஜக சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.  பாஜகவும் 105 இடங்களும் சிவசேனா கட்சி 56 இடங்களும் பிடித்துள்ளன.

இந்த கட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியின் 50க்கு 50 பார்முலா பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா கட்சி தங்களுக்கும் முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகள் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ஆனால்,பாஜக முதல்வர் பதவியை தர மறுத்து வருகிறது. இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு தரப்பினரும், மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனை பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது…