மும்பை

காராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்ட மேலவை உறுப்பினராக பொறுப்பு ஏற்றார்

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார்  அப்போது அவர் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக இல்லை.  எனவே அவர் மே மாதம் 27 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு அவை உறுப்ப்பினராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிர சட்ட மேலவையில் 9 இடங்கள் காலியானது.  அதற்கு முதல்வர் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, நீலம், பாஜக வேட்பாளர்கள் ரஞ்சித் சிங் மொஹித் பாட்டீல், கோபிசந்த் படால்கர், பிரவீண் தட்கே, ரமேஷ் கராத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் ஷிண்டே, அமோல் மிட்கரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் ரத்தோட் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த 9 இடங்களுக்கு 9 பேர் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக முடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   அதையொட்டி இன்று சிவசேனா கட்சியின் தலைவரும்  மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.