கொரோனாவை விரட்ட பிரார்த்தனை.. கோவிலில் மனமுருகிய முதலமைச்சர்… 

கொரோனாவை விரட்ட பிரார்த்தனை.. கோவிலில் மனமுருகிய முதலமைச்சர்…

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் உள்ள வித்தால் பகவான் கோயில் மிகவும் பிரசித்தமானது.

இந்த கோயிலில் ‘’ஆஷாதி ஏகாதேசி ‘ நாள் ரொம்பவும் விஷேசம்.

இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், இங்கு  சாமியைத் திரண்டு வந்து வழிபடுவது வழக்கம்.

நேற்று ‘ஆஷாதி ஏகாதேசி’’ நாளை முன்னிட்டு.மகாராஷ்டிர முதல் –அமைச்சர் உத்தவ் தாக்கரே, தனது மனைவி ராஷ்மியுடன் இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்தார்.

கொரோனா விலக, மனம் உருகப் பிரார்த்தனையும்  மேற்கொண்டார்.

‘’ ஏதாவது அதிசயம் நிகழ்த்தி கொரோனாவை இந்தியாவில் இருந்து விரட்டுமாறு பகவானிடம் வேண்டிக்கொண்டேன். இந்த வைரசுக்கு எங்களிடம் மருந்து இல்லை. நீதான் அதிசயம் நிகழ்த்தி கொரோனாவிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்’’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், தாக்கரே.

ஊரடங்கு காரணமாக நேற்று இந்த கோயிலில் சாமி கும்பிட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

-பா.பாரதி.