முதல்வர் மனைவி அபாய செல்பி: பாதுகாப்பு அதிகாரிகள் தவிப்பு : அதிர்ச்சி வீடியோ

மும்பை

பாதுகாவலர் எச்சரிக்கையை மதிக்காமல் மகாராஷ்டிர முதல்வர் மனைவி சொகுசு கப்பல் ஓரத்தில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

நேற்று இந்தியாவின் முதல் வணிக உல்லாசக் கப்பல் ”ஆங்கிரியா” தனது பயணத்தை தொடங்கியது. இந்த பயணத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கப்பல் கோவாவுக்கும் மும்பைக்கும் இடையே வாரத்துக்கு நான்கு முறை பயணிக்க உள்ளது.

முதல் பயணத்தில் முதல்வருடைய மனைவி அம்ருதா ஃபட்நாவிஸ் பயணம் செய்தார். அப்போது அவர் கப்பலின் விளிம்பில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். அவருடைய பாதுகாவலர் அவர் பாதுகாப்பு எல்லையை மீறி வெளியே சென்றுள்ளதையும் இது அபாயகரமானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அம்ருதா ஃபட்நாவிஸ் அதை மதிக்காமல் செல்ஃபி எடுத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த நிகழ்வு வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அது சமூக வலை தளங்களில் வெளியாகி தற்போது பலராலும் பதியப் பட்டு வருகிறது. இதற்கு பலரும் தங்களின் கண்டனத்தை பின்னூட்டமாக தெரிவித்துள்ளனர்.

You may have missed