மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், அம் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் மேலும் 8,493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

அதன் மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 04 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரத்து 391 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆகையால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 228 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 265 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது வரை 1,55,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You may have missed