மும்பை:
ந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு  நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மத்தியபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 5,553 பேர்   பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 112,028 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை, 3,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் 24,118 பேர்  மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள். மக்கள் நெருக்கமுள்ள மும்பையில் கொரோனா தடுப்பு பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் தாராவிப் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டு மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நோய்தொற்று மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் உள்ளதாகவும், மாநில அரசு உண்மைத் தகவல்களை மறைத்துதெரிவிப்பதாகவும் அங்கிருந்து வரும் புலம்பெயர்ந்தோர் தெரிவிக்கின்ற னர்.

மகாராஷ்டிராவில்  நேற்று 63 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1390 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 10,318 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.