மும்பை

ன்னதான் தேர்தல் ஆணையம், மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த குழறுபடியும் நடக்காது என உத்திரவாதம் அளித்திருந்தாலும் தற்போதும் மகாராஷ்டிராவில் அதுபோல் ஒரு புகார் கிளம்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள புதானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  அதில் பூத் நம்பர் ஆறில், மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.  அதில் தேங்காய் சின்னம் முதலில் இருந்தது.  அது இண்டிபெண்டண்ட் வேட்பாளரான திருமதி அஷுதாய் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அப்போது முதலாம் எண்ணான தேங்காய் சின்னத்துக்கு நேரே உள்ள பட்டனை அமுக்கும்போது நன்காம் எண்ணில் உள்ள தாமரை சின்னத்துக்கு வாக்குப்பதிவு நடந்ததை போல எல் இ டி ஒளிர்ந்தது.

முதலில் இந்தப் புகார் காலை 10 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.   அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை எனக் கூறி தேர்தல் அதிகார் அதை நிராகரித்து விட்டார்.  மேலும் மேலும் புகார்கள் மதியம் 1.30 மணிக்கு குவிய ஆரம்பித்தது.   பின்பு உயரதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து இயந்திரத்தை சோதித்தார்.  புகார் உண்மை என அறிந்து, அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.   பிறகு மற்றொரு வாக்குச்சாவடியில் வேறு ஒரு இயந்திரத்தைக் கொண்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.   பிறகு மற்ற வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் வாக்களிக்க உத்தரவிடப்பட்டது.

இது பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட புகாருக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.