மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு….!

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டனில் உருவாகிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது பல மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந் நிலையில், மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. கடந்த மாதம் கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.