மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…!

புனே: மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமலில் உள்ளது. ஆனாலும் பாதிப்புகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அக்டோபர் தொடக்கத்தில் உணவகங்கள், விடுதிகள், மதுபான விடுதிகள் திறக்க விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக் டவுன்  நடவடிக்கைகளை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.