மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்து 10 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில், கட்சிகளியே உள்ள பிரச்சினைகள் தீர்ந்து ஆட்சி அமைக்கும் வரை நான் நான் ஆட்சி அமைக்கிறேன் என்று விவசாயி ஒருவர்  ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சியான பாஜக, சிவசேனா இடையே அதிகாரப்பகிர்வு விஷயத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளின் இடையே உள்ள பிரச்சினை முடியும் வரை என்னை முதல்வராக நியமியுங்கள் என்றும்,  விவசாயிகள் பிரச்சினையை நான் தீர்க்கிறேன் என்று விவசாயி  ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்து தெறிக்க விட்டுள்ளார். இதை பார்த்த  ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்

இன்று காலை பீட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அந்த மாவட்டத்தின் கேஜ் தாலுகாவில் உள்ள வடமவுலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகாந்த் விஷ்ணு கடாலே என்பவர் ஆட்சியரிம் ஒரு மனு கொடுத்தார், அதில்,   “மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது, யார் முதல்வராக வருவது என சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே அதிகாரப்போர் நீடித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் விவசாயிகள் நிலையைக் கவனிக்க இருவரும் தயாராக இல்லை. தொடர் மழையால் மாநிலத்தின் ஏராளமான இடங்களில் பயிர்கள் நாசமடைந்து, விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளார்கள்.

சிவசேனா, பாஜக இரு கட்சிகளும் தங்களுக்கு இடையிலான அதிகாரப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும்வரை முதல்வர் பதவியை என்னிடம் வழங்குங்கள். நான் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன். அதற்கு ஆளுநரிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கூறிய அந்த விவசாயி,  ” மாநிலத்தில் பெய்த காலம் தவறிய மழையால் ஏராளமான மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வீணாகி, விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளார்கள். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்கிறேன் என்று கூறி வாக்குகளைப் பெற்றுவிட்டு பாஜக, சிவசேனா கட்சியினர் இருவரும் யார் ஆட்சிக்கு வருவது தொடர்பாக போட்டி போடுகிறார்கள். விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க அக்கறையில்லை. ஆதலால், இரு கட்சியினருக்கும் இடையே பிரச்சினையைத் தீர்க்கும் வரை முதல்வர் பதவியை என்னிடம் கொடுங்கள், நான் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்த்து நீதி வழங்குகிறேன் என்று மனு அளித்தேன் என்று அசால்டாக கூறிச்சென்றார்.