மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு தள்ளி வைப்பு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் வரும் 11ம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள்  நடைபெற உள்ளது. ஆனால் கொரோனா காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந் நிலையில், தேர்வுகள்  ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை ஏற்று அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது, தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளார்.