பெங்களூரு

மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஆளுநர் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர  மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது. இதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு இக்கூட்டணி ஆட்சி அமைக்க இருந்த நிலையில் விடியற்காலையில் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஜெனரல் சோப்ராஜ்ஜி, “மகாராஷ்டிர ஆளுநர் அவசரமாகச் செயல்பட்டதாக தோன்றுகிறது.   இது சரியானது இல்லை. அவர் இவ்வளவு அவசரமாகத் தேவேந்திர பட்நாவிஸுக்கு பதவி பிரமணம் செய்து வைத்திருக்கக்கூடாது   அவர் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ம்ற்றும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு செயல் பட்டிருக்கலாம்

அவர் உடனடியாக ஆதரவை நிரூபிக்க வேண்டும் என அக்கூட்டணிக்கு ஆணை இட்டிருக்கலாம்.   அவர் அதற்குத் தயங்கியதால் அவரது நோக்கம் குறித்து மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.  சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மீது சந்தேகம் உண்டாவது நாட்டுக்கு நல்லது இல்லை.“ என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “ஜனாதிபதி விதி எண் 356 பிரிவு 2 இன்ப்டி ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்துள்ளார்.   இந்த விதிகள் அவசரக் காலத்துக்கு உரியவை.  இது சட்டவிரோதமானது அல்ல எனினும் தர்மத்துக்கு மாறானவை.

இந்த முடிவுகளை எடுக்க வேண்டியது அமைச்சரவை ஆகும்.  ஆனால் அமைச்சரவை இது குறித்து சந்திப்பு நடத்தவில்லை. எனவே இது சட்டவிரோதமாகும்.  தற்போது அவசரத் தேவை இல்லாமல் இது நடந்ததால் இது தர்மத்துக்கு மாறானவை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.