தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா இலவச சிகிச்சை : மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை

காராஷ்டிர அரசு இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 37412 ஆகி உள்ளது.  இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதாவது 11506 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளனர்.  இதில் மும்பை நகரில் மட்டும் 8000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.  மத்திய அரசு இதையொட்டி கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி உள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்.   இவர்களைச் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு மகாராஷ்டிர அரசு அனுப்பி வருகிறது.    குறிப்பாக மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் வெளி மாநில  தொழிலாளர்கள் சிக்கி வாடுகின்றனர்.  எனவே கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக இதை மகாராஷ்டிர அரசு செய்து வருகிறது.

அத்துடன் கொரோனா பாதிப்பு உள்ள அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது.  அந்த அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.  இது இந்தியாவில் முதல் முறையாகும்.

இதனை அரசின் இலவச காப்பிட்டுத் திட்டத்தின் மூலம் வழக்க அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி