கொரோனா வைரஸ் எதிரொலி – மகாராஷ்டிரா சட்டபேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் குறைப்பு

மும்பை:

காராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தற்போது சட்டபேரவை கூட்டத்தை ஆறு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்ததாவது:

வரும் 20-ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த பட்ஜெட் கூட்டம் வரும் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த கூட்டத்திற்காக அதிகளவிலான அதிகாரிகள் மும்பை வர வேண்டும்.

அரசு அதிகாரிகள் வரமால் இருந்தால், மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுக்க அரசு அதிகாரிகளின் உதவி தேவைப்படுகிறது. அதனால், அரசு அதிகாரிகள் வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்ததாவது:

மும்பை சர்வதேச விமானத்திற்கு வரும் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்த தகவல்களின் படி, மும்பையில் கொரோனா வைரஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆணாலும், துபாயில் இருந்து வரும் பயணிகள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு மும்பைக்கு வந்துள்ளது. இதுவரை துபாயில் இருந்து வந்த 40 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் துபாயில் இருந்து மும்பைக்கு வர உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக தாக்கரே பேசுகையில், விளையாட்டு அரங்கில் அதிக கூட்டம் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்காக எங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது என்றும், இதுகுறித்து விவாதித்து வருகிறோம் என்ரும் கூறினார். கூடுதலாக புனேவில் உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடந்து வருவதால், பள்ளிகளை மூடுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.

இதுவரை மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து மொத்தமாக மும்பையில் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தபே கூறியதாவது:

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இதுவரை 1,300 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தலைமை செயலாலர் தலைமையிலான கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் வருவாய், வீடு, நகர்புற மற்றும் நகர்புற மேம்பாடு செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதார துறைக்கு உதவி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.