மகாராஷ்டிர அரசு 180 தாலுக்காக்களை வரட்சி பகுதிகளாக அறிவித்தது

மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் 180 தாலுக்காக்களை வரட்சி பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த முறை பருவமழை சராசரிக்கும் குறைவாகவே பெய்துள்ளது. அதனால் மராத்வாடா பகுதியில் பல இடங்களில் நீர்நிலைகளில் 28.81 % அளவே நீர் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் உயிர்நாடி என கூறப்படும் ஜயக்வாதி அணியில் 45.88% மட்டுமே நீர் உள்ளது.

மராத்வாடா பகுதியில் உள்ள 9 அணைகளில் 2 அணைகள் முழுவதுமாக வற்றிப் போய் உள்ளது. இது தவிர மேற்கு விதர்பா பகுதியில் உள்ள அமராவதியில் உள்ள அணைகளிலும் நீர் அளவு 57.37% மட்டுமே உள்ளது. கிழக்கு விதர்பா பகுதியில் உள்ள நாக்பூர் மற்றும் சுற்றுப்புற அணைகலில் 50.02% நீர் உள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதலில் 200 தாலுக்காக்களில் நீர் நிலைமை அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளதால் அமைச்சர்கள் இது குறித்து அறிக்கை அளிக்க வேண்டுமேன உத்தரவிட்டார். அமைச்சர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அரசு 180 தாலுக்காக்களை வரட்சி பகுதிகளாக அறிவித்துள்ளது.