மகாராஷ்டிர அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் ஊதிய உயர்வ்

மும்பை

ரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டியோ அல்லது புத்தாண்டு பரிசாகவோ மகாராஷ்டிர அரசு தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது.

ஏழாவது ஊதிய ஆணையம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு பரிந்துரை செய்தது.    ஆனால் அந்த பரிந்துரையை வெகுநாட்களாக மகாராஷ்டிர அரசு ஏற்காமல் இருந்தது.   இது குறித்து அரசு பணியாளர்கள் பல முறை நினைவூட்டியும் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு எவ்வித பதிலும் தராமல் இருந்தது.    இதனால் அரசு ஊழியர்கள் தேவேந்திர பட்நாவிஸ் அரசின் மீது மிகவும் அதிருப்தியுடன் இருந்தனர்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது.    இதற்கு அரசு ஊழியர்களின் அதிருப்தியும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.    இந்த தேர்தல் வர உள்ள 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னோடி தேர்தல் என கூறப்படுவதால் மக்களவை தேர்தலிலும் இந்த அரசு  ஊழியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   அந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஊதிய உயர்வு அளிக்க உள்ளது.   இந்த மூன்று வருட ஊதிய உயர்வும் ஜனவரி 1 வரை கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதிய சம்பளத்துடன் அரசு வழங்க உள்ளது.

இதன் மூலம் 17 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள் என கூறப்படுகிறது.   அரசுக்கு இதனால் ரூ.21000 கோடி அதிக செலவு உண்டாகும் என தெரிய வந்துள்ளது.   மகாராஷ்டிர அரசு இதை தனது ஊழியர்களுக்கான புத்தாண்டு பரிசு என விமர்சித்துள்ளது.