Random image

மகாராஷ்டிரா அம்பானியின் பல்கலைக்கழகத்துக்கு அரசு வரிச்சலுகை

மும்பை

முன்னேறி வரும் பல்கலைக்கழகம் என விருது பெற்ற அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கு மகாராஷ்டிர அரசு வரிச்சலுகை மற்றும் நிலம் அளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் முன்னேறி வரும் பல்கலைக்கழகம் என்னும் விருதை ஆறு பல்கலைக்கழகங்களுக்கு அளித்தது.   அந்த பல்கலைக்கழகங்களில் அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.   இன்னும் தொடங்கப்படாத நிலையில் இந்த பல்கலைக்கழகத்துக்கு முன்னேறி வரும் பல்கலைக்கழகம் என்னும் விருது கொடுத்ததற்கு கடும் சர்ச்சை எழுந்தது.

ஜியோ பல்கலைக்கழகம் மும்பை மாநகர எல்லைக்குள் கர்ஜத் தாலுகாவில் அமைய உள்ளது.   இந்த பல்கலைக்கழகம் அமைக்க மகாராஷ்டிர அரசு நிலம் அளித்துள்ளது.   அது மட்டுமின்றி வரிச்சலுகை உள்ளிட்ட பல நிதிச் சலுகைகளும் அளித்துள்ளது.   மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னேறி வரும் பல்கலைக்கழகம்  விருது பெற்றதற்காக ஜியோ பல்கலைக்கழகத்துக்கு இது மகாராஷ்டிரா அரசு அளிக்கும் சலுகை என மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே கூறி உள்ளார்.