Random image

வெளியே வாங்கும் உணவுபொருட்களை தியேட்டருக்குள் எடுத்துச் செல்லலாம்: மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை:

தியேட்டருக்குள் விற்கப்படும் உணவு பொருட்கள், ஸ்நாக்ஸ் போன்றவை அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில், வெளியே வாங்கும் உணவுபொருட்களை  தியேட்டருக்குள் எடுத்துச் செல்லாம் மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு ஆகஸ்டு 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்து உள்ளது. மேலும் தியேட்டர்களில் விற்கப்படும் உணவு பொருட்கள் அதற்குரிய சந்தை விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

பொதுவாக சாதார தியேட்டர் முதல் மல்டிபிளஸ் தியேட்டர் மற்றும் மால்களில் உள்ள தியேட்டருக்குள் படம் பார்க்க செல்பவர்கள், வெளியே வாங்கும் உணவு பொருட்கள், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் போன்றவைகள் எடுத்துச்செல்ல  நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

தியேட்டரில் படம் பார்க்க வருபவர்கள், மால்களுக்கு செல்பவர்கள்  அங்கு அதிக விலைக்கு விற்கப்படும் உணவு பொருட்க ளையே வாங்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்படும், நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தியேட்டர் நிர்வாகங்கள் வெளியில் இருந்து எடுத்து செல்லப்படும் ஸ்நாக்ஸ் போன்ற உணவு பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதித்தே வருகின்றனர்.

இந்த நிலையில், முதன்முதலாக மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டு 1ந்தேதி முதல் தியேட்டருக்கு படம் பார்க்க செல்பவர்கள் வெளியில் இருந்து தண்ணீர் மற்றும் தேவையான உணவுபொருட்களை எடுத்துச் செல்லாம் என்று அறிவித்து உள்ளது.

மகராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்திலும் அரசு இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், தியேட்டர் முதலாளி களின் கொள்ளையை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.