ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…

மும்பை: 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது மகாராஷ்டிரா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மூலமே குணமளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துக்கு சமீப காலமாக தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், குஜராத் நிறுவத்தில் இருந்து 4.75 கோடி ரெம்டெசிவிர்  மருந்து ரகசியமாக வாங்கி பதுக்கி வைத்திருந்த மகாராஷ்டிரா மாநில பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது, மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு 38.8 லட்சம் டோஸ் அளவுக்கு இந்த மருந்தை தற்போது உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்நாட்டு தேவை உயர்ந்துவருவதால் இதன் உற்பத்தியை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, மேலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தடைவிதித்ததோடு இதன் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், யூனியன் பிரதேசமான டாமன் பகுதியில் உள்ள ப்ரக் பார்மா ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து மும்பையில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை தடையை மீறி அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குனரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால்,  அப்போது திடீரென முன்னாள் முதலமைச்சர் பட்நாவிஸ் ஆஜரானார். இது சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.