பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் இசைப் பள்ளி!! மகாராஷ்டிரா அரசு கவுரவம்

மும்பை:

மகாராஷ்டிராவில் மங்கேஷ்கர் பெயரில் இசைப் பள்ளி தொடங்கப்படும் என்று கல்வி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இசை துறையில் லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆற்றிய மிகப்பெரிய சேவையை கவுரவிக்கும் வகையில் ‘மங்கேஷ்கர் இசைப் பள்ளி’’ அரசு சார்பில் தொடங்கப்படும் என்று மகாராஷ்டிரா கல்வி துறை அமைச்சர் வினோத் தாவேத் மும்பையில் நடந்த விழாவில் அறிவித்தார்.

இசை துறையில் 75ம் ஆண்டு விழாவை நிறைவு செய்துள்ள லதா மங்கேஷ், அவரது சகோதரர் ஹிரிதயாநத் மங்கேஷ்கரின் 80வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், ‘‘மங்கேஷ்கர் குடும்பம் இந்த சமூகத்திற்கு பல பொது சேவைகளை செய்துள்ளது.

தினாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை மற்றும் இதர அமைப்புகள் மூலம் ஏழை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான சேவைகளை செய்துள்ளனர். இதனால் மக்கள் இதயங்களில் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான இடம் உண்டு. இசையில் அவர்களது குடும்பத்தினரின் உலகளாவிய பங்களிப்பு அனைவரும் அறிந்த விஷயம்’’ என்றார்.