மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மண்டலங்களாக பிரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தியது. நாளை மறுநாளுடன் இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

அதன் பிறகு ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது இன்னும் முடிவாகவில்லை. காரணம்,  இந்த 21 நாட்களுக்குள் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை.

ஆகையால், மருத்துவ வல்லூனர்கள் குழுக்கள் மற்றும் உலக சுகாதார மையம் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந் நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் இருக்கும் மண்டலங்கள் 3 ஆக பிரிக்கப்பட உள்ளன. அதன்படி 15 கொரோனா நோயாளிகள் இருக்கும் பகுதியானது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும்.

15 பேருக்கு குறைவாக இருக்கும் பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாக அடையாளப்படுத்தப்படும். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இல்லை எனில் அந்த பகுதி பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்படும்.