கொரோனா பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா: 33 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

புனே: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் பலியானோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்  நடவடிக்கையாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது.

கடந்த 4ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உச்சபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்து 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது.

7688 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், வீடு திரும்பி உள்ளனர்.  மகாராஷ்டிராவுக்கு அடுத்து பலி எண்ணிக்கையில் குஜராத் 2வது இடத்திலும் (659), மத்திய பிரதேசம் 3வது இடத்திலும் (248) உள்ளது. மேற்கு வங்கம் 4வது இடத்திலும் (238), ராஜஸ்தான் 5வது இடத்திலும் (131) இருக்கின்றன.