மும்பை:
கொரோனா பரவல் அதிகரிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மகாராஷ்டிரா அரசு, அமராவதியில் 3 நாள் லாக்டவுனை அறிவித்துள்ளது.

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும், மகாராஷ்டிராவில் 3,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

மும்பை, புனே, அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளும் விதர்பா பிராந்தியமும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புனே, மும்பை, நாக்பூர், தானே மற்றும் அமராவதி ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று லோக்கல் ரயிலில் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், இன்று பயணம் செய்து மக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை நேரில் ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தொடர்பான விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் மாநிலம் முழுக்க லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, அம்ரவாதியில் 3 நாள் லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக மகராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.