மத்திய போலீஸ் கையில் மகாராஷ்டிரா ஒப்படைப்பு..

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா, கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் ஒரு புறம் இருக்க, 24 மணி நேரமும் உணவு, உறக்கம் இன்றி கொரோனா ஒழிப்பில் போராடும் உள்ளூர் போலீசார் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 9 போலீசார் உயிர் இழந்து விட்டார்கள்.

900 போலீசாரை கொரோனா பாதித்துள்ளது.

மாநில போலீசுக்குக் கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்து, அவர்கள் இடத்தில் மத்திய போலீசை நிறுத்த மகாராஷ்டிர அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை வேறு வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு உதவ 20 கம்பெனி மத்திய ஆயுதப் படை போலீசை அனுப்புமாறு அந்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மத்திய அரசை  வலியுறுத்தியுள்ளார்.

20 கம்பெனி என்பது 2 ஆயிரம் காவலர்கள்.

மாநில போலீசாரில் சிலரை , சிறிது நாள் ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு, உள்ளூர் போலீஸ் துணையுடன் மத்திய போலீசையும் சட்ட,ம்-ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது, மகாராஷ்டிர மாநில அரசு.

– ஏழுமலை வெங்கடேசன்