கொரோனா பரிசோதனையில்  அத்துமீறல்; ’லேப் டெக்னீஷியன்’ மீது பலாத்கார வழக்கு..

காராஷ்டிர மாநிலம் அமராவதியில் வணிக வளாகம் ஒன்றில் (மால்) வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ( ஆந்திராவிலும் ஒரு அமராவதி உள்ளது)


இதனால், அந்த மாலில் பணிபுரியும் சுமார் 25 ஊழியர்களுக்கு அங்குள்ள ’லேப்’ ஒன்றில் மூக்கில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பெண் ஊழியர் ஒருவருக்கு மட்டும், அவரின் அந்தரங்க பகுதியில் இருந்து, ‘’லேப் டெக்னீஷியன்’’ மாதிரி எடுத்துள்ளான்.
இது குறித்து அந்த பெண் பட்னேரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அத்துமீறலில் ஈடுபட்ட அந்த ‘லேப் டெக்னீஷியன் ‘ மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர்..
இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ள மகாராஷ்டிர மாநில மகளிர் நலத்துறை அமைச்சர் யசோமதி தாகூர்’’ நாட்டுக்கு முதல் குடியரசு தலைவரை ( பிரதீபா பாட்டீல்) அளித்த மாவட்டத்தில் இப்படி ஒரு அக்கிரமம் நடந்திருப்பது அதிர்ச்சி தருகிறது. குற்றவாளியை லேசில் விடமாட்டோம்’’ என எச்சரித்துள்ளார்.
-பா.பாரதி.