மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

அம்மாநிலத்தில்  சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பிற மாநிலங்களில் இருப்பது போன்று மகாராஷ்டிராவிலும்  முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:

மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று நீங்கிவிட்டது எனச் சொல்ல முடியாது. ஆனாலும் நிலைமை கட்டுக்குள்ளே தான் உள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது.

எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறைந்தது இன்னும் ஆறு மாதங்கள் மக்கள் பின்பற்ற வேண்டும்  என்றார்.