மகாராஷ்டிரா அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கொரோனா சோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

தற்போது கொரோனாவுக்கு கராட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாட்டீல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

நேற்றிரவு தொற்றுநோய்க்கு பரிசோதித்து பாசிடிவ் ஆனதால் கராட்டில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டீல் மகன் கூறுகையில், அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நலன் நன்றாக உள்ளது. கவலைப்பட வேண்டியது இல்லை என்றார்.  சமீபத்தில் தம்மை தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதித்து கொண்டு தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.