வலது கொடுத்தது, இடது வாங்கியது.. பாஜக எம்எல்ஏவின் கில்லாடிதனம்..

மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவிலேயே, கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது தெரிந்த விஷயம்.

அங்குள்ள கல்யாண் தொகுதி எம்.எல்.ஏ. ராஜு என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனை ’டோம்பிவிலி’ பகுதியில் உள்ளது.

’எனது மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மாநகராட்சிக்கு இலவசமாகக் கொடுக்கிறேன்’’ என்று தாரை வார்த்தார்.

கொரோனா வைரஸ் முற்றிலுமாக விரட்டப்படும் வரை மாநகராட்சி பொறுப்பில் அந்த மருத்துவமனை இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், அந்த மருத்துவமனைக்கு ஒரு மாத வாடகையாக 10 லட்சம் ரூபாய் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

’’’ அந்த மருத்துவமனை கடந்த சில மாதங்களாக நோயாளிகள் வராமல் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நைசாக அதனை மாநகராட்சிக்குத் தள்ளி விட்டு காசு பார்க்கிறார், எம்.எல்.ஏ.’’ என்று உள்ளூர் ஆட்கள் சொல்ல-

எம்.எல்.ஏ. கண்ணிலோ ரத்தச்சிவப்பு.

‘’ இதையெல்லாம் கூட அரசியல் ஆக்குவதா?’ நான் நினைத்திருந்தால் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இதனை வாடகைக்கு விட்டிருக்க முடியும். நல்ல காரியம் செய்தால் இப்படி விமர்சனம் செய்கிறார்களே?’’ என்று கொதிப்புடன் சொல்கிறார், எம்.எல்.ஏ.ராஜு.

இவர், நவநிர்மான் சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்.

பால்தாக்கரேயிடம் முறைத்துக் கொண்டு ராஜ் தாக்கரே சில ஆண்டுகளாக நடத்தி வரும் கட்சிதான் –நவநிர்மான் சேனா.

–  ஏழுமலை வெங்கடேசன்