மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன.    இந்த தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தன.   மொத்தம் 21 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.   இந்த தேர்தல்களின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

மொத்தமுள்ள 21 இடங்களில் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக் கூட்டணி 11 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளன.    பாஜகவுக்கு 5 இடங்களும், சிவசேனாவுக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன.    இதில் தேசியவாத காங்கிரஸுக்கு அதிக இடங்களாக 6 இடங்களும்,  சிவசேனாவுக்கு குறைந்த இடங்களாக 2 இடங்களும் கிடைத்துள்ளன.

இந்த வெற்றி குறித்து  தேசிய வாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், “வெற்றிக் காற்றின் திசை மாறி விட்டது.  நாங்கள் கிராமப் புறங்களில் மட்டும் இன்றி நகர்ப்புறங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்.   பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்த மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

பாஜக அரசின் விவசாயிகள் எதிர்ப்புக் கொள்கை, பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கை அகியவைகளை எதிர்த்து மக்கள் வக்களித்துள்ளனர்.  பாஜகவைப் போல் பேரணி நடத்தியோ பொய்யான செய்தித் தாள் விளம்பரங்களாலேயோ நாங்கள் வெற்றி பெறவில்லை.

சிவசேனா அரசை விமர்சிப்பதின் மூலம் தான் ஒரு நியாயமான கட்சி என காட்டிக் கொள்ள முயன்றது.   மக்கள் அந்தக் கட்சியின் இரட்டை வேடத்தை புரிந்துக் கொண்டு புறக்கணித்து விட்டனர்.   அந்தக் கட்சிக்கு இரு இடங்களெ கிடைத்துள்ளது.    அது கட்சியினால் அல்ல.  அந்த வேட்பாளரின் சொந்த செல்வாக்கினால்”  என தெரிவித்துள்ளார்.