வேளாண் துறை தொடர்பான மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவசேனா – காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்தில், ’’வேளாண் சட்டத்தை அமல் படுத்த மாட்டோம்’’ என அந்த மாநில துணை முதல் – அமைச்சர் அஜீத்பவார் அறிவித்துள்ளார்.

புனேயில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்’ வேளாண் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

‘’இதன் சட்டபூர்வமான தன்மை குறித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட அஜீத்பவார்,’’ அதுவரை இந்த சட்டத்தை இங்கு அமல்படுத்தப்போவதில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

-பா.பாரதி.