மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 364 போலீசாருக்கு கொரோனா: 3796 பேருக்கு தொடர் சிகிச்சை

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் தான் அதிக தொற்றுகள் காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் உள்ள போலீசாரும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந் நிலையில், மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிரா காவல்துறையில் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை 20,367 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 24 மணி நேரத்தில் 4 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.

ஆகையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 16,363 போலீசார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,796 போலீசார் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.

You may have missed