மும்பை

டுத்த மாத இறுதிக்குள் மகாராஷ்டிரா போலிசுக்கு மாட்டு இறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி வழங்கப்படும்.

மகாராஷ்டிரா மிருகப் பாதுகாப்பு சட்டம் 1976, பசுக்களையும் கன்றுகளையும் கொல்வதற்கு தடை செய்துள்ளது.    ஆனால் அதையும் மீறி பசுவைக் கொல்வது அதிகரித்துள்ளது.   பான்வெல் என்னும் இடத்தில் இருந்து மாட்டுக்கறி மாநிலம் எங்கும் சப்ளை செய்யப்படுகிறது.  ஆனால் அது ஆட்டுக்கறி என்ற பெயரில் எடுத்துச்  செல்லப்படுகிறது.

அதனால் மகாராஷ்டிரா அரசின்  தடவியல் விஞ்ஞானத் துறை மாட்டுக்கறியை கண்டுபிடிக்கும் கருவியை போலிசாருக்கு வழங்கி வருகிறது.   ஒரு கருவியின் விலை ரூ.8000 ஆகும்.  ஒரு கருவியைக் கொண்டு 100 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும்.   முப்பது நிமிடங்களில் அது மாட்டுக்கறிதானா என்ற முடிவு கிடைத்து விடும்.

இந்தக் கருவி வழங்கப்பட்ட பின் மாமிசம் ஏற்றிச் செல்லும் வண்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை உடனடியாக பரிசோதனை செய்ய முடியும்.   இதற்கு முன்பு DNA டெஸ்ட் மூலமாக மாட்டு இறைச்சியா என்பதை பரிசோதித்து வந்தனர்.  ஒரு மாதிரியை பரிசோதனை செய்ய ரூ 750 ஆகும்.  நேரமும் அதிகம் ஆகும்.

விரைவில் இது போன்ற கருவிகளை நாடெங்கும் அனுப்ப மும்பை தடவியல் துறை தயாராக உள்ளது.