புனே:

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்தடை காரண மாக, மெழுகுவர்த்தி உதவியுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

288 உறுப்பினர்களைக் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் பாஜ – சிவசேனா ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இது தவிர பிரகாஷ் அம்பேத்கர் தலையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.), ஓவைசி தலைமை யிலான ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

அங்கு காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது  இந்த நிலையில் புனே தொகுதியில் உள்ள சிவாஜி நகர் வாக்குச்சாவடியில் திடீரென மின்சார விநியோகம் தடைபட்டது. இதனால்  அந்த வாக்குச்சாவடி  இருளில் மூழ்கியது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பேட்டரி உள்ளதால், வாக்குப்பதிவு சில மணி நேரம் தொடர்ந்து இயங்கும். அதன்காரணமாக,  தேர்தல் அதிகாரிகள் இருக்கும் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, அதன்ப  உதவியோடு, வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதுகுறித்து கூறிய தேர்தல் அலுவலர் சஞ்சய்பதேரே , வாக்குப்பதிவு நடைபெற்றும் இந்த பள்ளியில் மின்சாரம் இல்லை. மின்சார மீட்டரில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், மின் தடை ஏற்பட்டு உள்ளது என்றும், மதியம் வரை  மின்சாரம் கிடைக்காத நிலையில் தேர்தல் ஆணையத்தால் ஜெனரேட்டர் வழங்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.