மும்பை: அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, மகாராஷ்டிரா கேட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.
ஒட்டுமொத்தமாக 50231 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இன்று மட்டும் 3041 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனவால் 58 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1635ஆக அதிகரித்துள்ளது. தொடரும் பாதிப்பை அடுத்து சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது மகாராஷ்டிர அரசு.
அதன் ஒரு பகுதியாக கேரளாவின் உதவியை நாடியிருக்கிறது. தங்கள் மாநிலத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்களை தருவிக்குமாறு கேட்டுள்ளது.