மும்பை:

காராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி வழங்கியுள்ளது. இருந்த போதிலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செய்தித்தாள்கள் மற்றும்  பத்திரிகைகள் வீடுகளுக்கு விநியோகிக்க தடை விதிகப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 3,202 ஆக இருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மும்பையில் அதிக அளவாக 184 பேருக்கும், புனேவில் 78 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது