நடிகர் சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மாநில அரசுதான்: ஆர்டிஐ தகவல்

மும்பை:

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத், மாநில அரசின் அதிகாரத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக ஆர்டிஐ (தகவல் பெறும் உரிமை சட்டம்) மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தர விட்ட நிலையில், தமிழகஅரசு முடிவு செய்தும், அவர்கள் விடுதலை தொடர்பான அறிவிப்பில் கவர்னர் கையெழுத்திட தாமதப்படுத்துவதால் 7 பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது.

ஆனால், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யப் பட்டார். அவரது விடுதலைக்கு கவர்னரோ, மத்தியஅரசோ எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மகாராஷ்டிர மாநில அரசே தன்னிச்சையாக விடுதலை செய்தது.

இதுதாடர்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன்  ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஆர்டிஐ, நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிரா அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது என தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி