மும்பை

காராஷ்டிர மாநில மக்களவை தேர்தல் களம் குறித்த ஒரு ஆய்வு

கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் பல முறை ஆறு ரன்கள் அதாவது சிக்சர் போட்டி முடிவுகளில் மாறுதல் உண்டாக்கும். அதைப்போல் மகராஷ்டிரா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் மாறுதல் உண்டாக்க வல்லதாக ஆறு மாநில கட்சிகள் உள்ளதாக கூறப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் களத்தில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக, மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகளின் வெற்றி தோல்வி இந்த சிறு கட்சிகளின் கைகளில் உள்ளது.

இதில் முதல் கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சி இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. கடந்த 2009 மற்றும் 2014 ஆம் வருடத்தில் இருந்தே இக்கட்சி வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் இக்கட்சி போட்டியிடாததால் அது எந்தக் கட்சிக்கும் சாதகமாகலாம் என கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஆயினும் அவர் தேசியவாத காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளார். என கூறப்படுகிறது.

அடுத்ததாக வன்சிட் பகுஜன் ஆகாதி கட்சி வருகிறது. பிரகாஷ் அம்பேத்கார் தலைவரக உள்ள இந்தக் கட்சிக்கு ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவரான அசாதுதின் ஓவைசியின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இந்த கட்சிக்கு தங்கள் கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தன. ஆனால் பிரகஷ் அம்பேத்கார் முதலில் கேட்ட 12தொகுதிகளை 22 ஆக உயர்த்தியதால் கூட்டணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

தற்போது பிரகாஷ் அம்பேத்கார் சுயேச்சைகளுடன் இணைந்து காங்கிரசையும் பாஜகவையும் ஒரு சேர எதிர்க்க உள்ளார். தானே, விதர்பா, மத்திய மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் நல்ல செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தவிர சிறுபான்மையினர் வாக்குகளும் பெருமளவில் இவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ராய்கட் மாவட்டத்தில் மட்டுமின்றி மேற்கு மகாராஷ்டிராவில் ஒரு சில பகுதிகளிலும் செல்வாக்குடன் உள்ளது. இந்த கட்சியும் தற்போதைய தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. தனது ஆதரவை காங்கிரச்- தேசிய வாத காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்துளது. இதனால் ராய்கட், மாவல் மாதா மற்றும் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது.

சுவாபிமானி சேத்கரி சங்கடனா கட்சி யின் தலைவர் ராஜு ஷெட்டி மாநிலத்தில் மிக பலம் பொருந்திய கரும்பு விவசாயிகள் தலைவராக உள்ளார். இவர் மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஜாம்பவான்களுடன் விவசாயிகள் நலனுக்காக மோதி வென்றுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுக்கு எதிராக பாஜக அணியில் இணைந்து வெற்றி பெற்றார். ஆயினும் அவர் தற்போது விவசாயிகள் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால் தற்போது பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் செர்ந்துள்ளர்.

பகுஜன் விகாஸ் ஆகாதி கட்சியின் தலைவர் ஹிதேந்திர தாகுர் வசாய், பால்கர் ஆகிய பகுதிகளில் செல்வாக்குடன் உள்ளார். கடந்த 2014 ஆம் வருடம் சட்டப்பேரவையில் பாஜகவை இவர் கட்சி ஆதரித்தது. ஆனால் பால்கர் பகுதி இடைத் தேர்தலில் பாஜகவுடன் இவருக்கு பிரிவு ஏற்பட்டது. தற்போதைய மக்களவை தேர்தலில் இவருடைய கட்சி பால்கர் தொகுதியில் நிற்க தீர்மானித்துள்ளது. ஆயினும் எதிர்க்கட்சி கூட்டணியில் ஈஅனய் விரும்பாத தாக்குர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் எனகேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியக் குடியரசு கட்சியின் தலைவர் ராம்நாத் அதுவாலே மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்து வருகிறார். ஆயினும் அவருக்கு இம்முறை பாஜகவால் தொகுதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே அவர் பாஜகவுக்கு எதிராக திரும்பலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அவர் இன்னும் மத்திய அமைச்சரவையில் தொடர்கிறார். இவருக்கு மாநிலம் எங்கும் தலித்துகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பீமா – கோரேகான் வன்முறை சம்பவ நேரத்தில் இவர் சரியான முடிவு எடுக்கவில்லை என தலித் மக்கள் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. இவருக்கு தொகுதி அளிக்கவில்லை எனினும் பாஜக தலைமை இவரை சமாதானப்படுத்தி கூட்டணியில் நீட்டிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.