மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை தாண்டியதுகொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முன்னிலை யில் உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 3041 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 50231 ஆக உயர்ந்ள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1635 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.  தமிழகத்தில் 16277 பேருக்கும், குஜராத்தில் 14056 பேருக்கும், டெல்லியில் 13418 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.