மகாராஷ்டிரா : கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் புதிய சட்டம்

மும்பை

காராஷ்டிர அரசு கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.

மதம் மாறி மற்றும் சாதி மாறி திருமணம் செய்துக் கொள்வோர் ஆணவக் கொலை, சமூகம் மற்றும் உறவினர்களால் புறக்கணித்தல் ஆகிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.  இது நாடெங்கும் பரவி வரும் பிரச்னையாக உள்ளது.   உச்சநீதிமன்றம் இவ்வாறு திருமணம் செய்துக் கொள்வோருக்கு மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி உள்ளது.

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்ச்ர் ராஜ்குமர் படாலே பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், “மகாராஷ்டிர அரசு கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அவ்வாறு மணம் புரிந்தோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் சட்டம் இயற்ற உள்ளது.   இவ்வாறு மணம் புரிந்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த சட்டம் கவனம் செலுத்தும்.

நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா நான்காம் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.   கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் இது போல் 69 சம்பவங்கள் நடந்துள்ளன.  இதை மனதில் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட உள்ளது.   இந்த சட்டத்தின் மூலம் திருமணம் செய்துக் கொள்பவர் மட்டும் இன்றி அவர்களது குழந்தைகளும் பயன் பெறும் வகையில் சட்டம் அமைக்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.