மும்பை: 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நாளை முதல் திறக்க மகாராஷ்டிரா ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட லாக் டவுன்  காரணமாக, மார்ச் 25ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில், திரையரங்குகளை அக்டோபர் 15ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனால், மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி தரவில்லை. இந்நிலையில், நவம்பர் 5ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளில் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்பாடு, உடல் வெப்பப் பரிசோதனைகள் ஆகியவற்றை  மேற்கொள்வதை கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணம், கேண்டீன்களில் நொறுக்கு தீனிகளுக்கான கட்டணம் ஆகியவற்றை இணைய வழியில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.