மதுபானங்கள் வீடு தேடி வரும்!: இந்தியாவிலேயே முதன் முதலாக அறிமுகம்!

ந்தியாவிலேயே முதல்முறையாக மதுபான வகைகளை வீட்டிற்கே டெலிவரி செய்ய மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது.

அன்றாடத்தேவையான காய்கறி முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பெறும் முறை (ஹோம் டெலிவரி)  வசதி வந்துவிட்டது.

இணையத்தில் பொருளைத் தேர்வு செய்து க்ளிக் செய்தால் போதும்.

இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு மதுபானத்தையும் வீடு தேடி ஹோம் டெலிவரி செய்ய தீர்மானித்துள்ளது. இது குறித்து அம்மாநில அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, தெரிவித்ததாவது:

“இந்தியாவிலேயே முதல்முறையாக மகாராஷ்டிரா அரசு மதுபானத்தை வீடு தேடி சென்று டெலிவரி செய்ய தீர்மானித்துள்ளது. இதன்நோக்கமே விபத்துகளை குறைக்க செய்வதே. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டும்போது விபத்துகள் அதிகமாகி விலைமதிப்பில்லாத உயிர்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

ஆகவே இனிமேல் காய்கறி, மளிகை பொருட்களை வீட்டிலிருந்து ஆர்டர் செய்துவது போல் மதுபானத்தையும் ஆர்டர் செய்யலாம்.  அதேசமயம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேரிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வயது விவரங்களை அறிய சம்பந்தப்பட்டவரின் ஆதார் விவரங்கள் சேரிக்கப்படும்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்படி, 2015-ஆம் வருடம் நடைபெற்ற 4.64 லட்ச சாலை விபத்துகளில் 1.5 சதவீத விபத்துகள் குடித்துவிட்டு வாகனத்தை  ஓட்டிய காரணத்தினால் நடைபெற்றது தெரியவந்துள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.