கொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு

மும்பை

காராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.

இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 5134 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 2,17,121 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மகாராஷ்டிராவில் 224 பேர் உயிர் இழந்து இதுவரை 9250 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த மாதத்தில் மிகக் குறைவான பாதிப்பாக 785 பேரும் குறைந்த அளவு இறப்பு எண்ணிக்கையாக 64 பேரும் பதிவாகி உள்ளனர்.

இதுவரை மொத்தம் 1,18,558 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.