உறக்கத்தை கலைப்பதாக சேவல் மீது பெண் புகார்: மகாராஷ்ட்ர மாநிலத்தில் விசித்திரம்

புனே:

சேவல் தன் உறக்கத்தை கலைப்பதாகக் கூறி, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.


மகாராஷ்ட்ர மாநிலம் புனே மாவட்டம் சமார்த் போலீஸ் ஸ்டேஷனில் பெண் ஒருவர் அளித்த புகாரில், என் வீட்டு அருகே சேவல் ஒன்று தினமும் கூவுகிறது. இதனால் என் உறக்கம் கெடுகிறது.

எனவே, சேவல் மீதும் அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தனது சகோதரி விசித்திரமானவர் என்று தெரிவித்தார்.

இதுவரை புகார் ஏதும் பதியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.