காதலியிடம் மன்னிப்பு கேட்டு 300 பேனர் வைத்த காதலன்

புனே

ன்னிடம் சண்டை போட்ட காதலியிடம் மன்னிப்பு கேட்டு ஒரு காதலன் 300 இடங்களில் பேனர் வைத்தமைக்கு புனே மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது.

மகாராஷ்டிராவில் புனே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பிம்ப்ரி பகுதியில் வசிப்பவர் நிலேஷ் கேடேகர் என்னும் 25 வயது இளைஞர்.   இவர் ஒரு தொழிலதிபர்.    இவருக்கும் இவருடைய காதலியான சிவ்டே என்னும் பெண்ணுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.   கோபம் கொண்ட காதலி மும்பை சென்று விட்டார்.  அவரை சமாதானம் செய்ய நிலேஷ் எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை.

அந்தப் பெண் மீண்டும் புனே வரும் தகவல் அறிந்து அவரை எப்படியாவது சமாதானம் செய்ய நிலேஷ் விரும்பினார்.    நண்பரின் ஆலோசனைப்படி சிவ்டே புனே ரெயில் நிலையத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் 300 பேனர்களை அமைத்தார்.    அந்த பேனரில் ஒரு இதயம் வரையப்பட்டு ”சிவ்டே, என்னை மன்னித்து விடு” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த பேனர்களை ரகசியமாக இரவோடு இரவாக நிலேஷ் வைத்து விட்டார்.    இது குறித்து காலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.    காவல்துறை அதிகாரிகளின் புகாரை ஒட்டி அனுமதி இன்றி பேனர்களை வைத்த நிலேஷ் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.