மும்பை:
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய பிளாஸ்மா சிகிச்சை உதவுவதாக சில மாநில அரசுகள் கூறி வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்ட 53 வயது நபர் உயிரிழந்துள்ளதாக மாநிலஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்மா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபரின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவது பிளாஸ்மா தெரபி சிகிச்சையாகும். இந்த வகையான சிகிச்சை தற்போது சில மாநிலங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை சிறந்தது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அதுபோல  கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்து உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வருகிறார். தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்,    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முதலில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்ட நபர் ஒருவர்  திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மும்பையிலுள்ள லீலாவதி  மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்ததாகவும், இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக  கூறப்படுகிறது.