மும்பை:

இறைச்சிக்காக மாடு, ஒட்டகம், எருமை உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில மாட்டு இறைச்க்க விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால் உங்களுக்கு சைவ உணவுகளை வழங்கமாட்டோம் என்று கூறி மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பால், காய்கறிகளை மகாராஷ்டிராவின் சாலைகளில் கொட்டி மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளர்.

மேலும், மகராஷ்டிரா விவசாயிகள் நடவடிக்கை குழு மாநில அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கடன் தள்ளுபடியை ஏற்க வேண்டும்.

இல்லை என்றால் வரும் 12ம் தேதி முதல் சாலை போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்தை முடக்குவோம். அரசுக்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று அந்த குழு அறிவித்துள்ளது.