மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் முகமது ராஜினாமா?

கோலாலம்பூர்:

லேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளால், பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தற்போதைய பிரதமர்  மகாதீர் முகமது அறிவித்து உள்ளார்.

மலேசியாவின் கடந்த  2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதைத்தொடர்ந்து மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்றார். அங்கு தற்போது நிலவி வரும் அரசியல் சூழலால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவ தாக மகாதீர் அறிவித்திருந்தார். அவருக்கு எதிராகமலேசியப் பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் அதிருப்தியாளர்கள் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துஉள்ளார்.  இன்று  மலேசியாவின் மாமன்னரை நேரில் சந்தித்து கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.