முன்னாள் அரசின் குற்றங்கள் விசாரிக்கப்படும் : மலேசிய பிரதமர்

கோலாலம்பூர்

லேசியாவில் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மகாதிர் முகமது முந்தைய அரசின் குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்படும் என கூறி உள்ளார்.

மலேசியாவில் தற்போது முதல் முதலாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 93 வயதான மகாதிர் முகமது பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.  இதற்கு முந்தைய ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியதால் மகாதிருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை மகாதிர் சந்தித்தார்.   அப்போது, “முந்தைய அரசின் ஊழலைக் கண்டுபிடிக்க புதிய ஊழல் ஒழிப்பு அமைப்பு அமைக்கப்படும்.   அந்த அமைப்பின் மூலம் முந்தைய அரசின் குற்றங்கள் விசாரிக்கப்படும்.   அனைத்து அமைச்சர்களும் அதனால் எந்த ஒரு ஆவணத்தையும் அழிக்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.