டில்லி

ர் எஸ் எஸ் மற்றும் காந்தி குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையை தி டெலிகிராஃப் ஊடகத்தில் ராமச்சந்திர குகா வெளியிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி மீது ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு வெறுப்பு உள்ளது அனைவரும் அறிந்ததே.   ஆனால் தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் இருந்து வந்த பாஜக ஆட்சியில் காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.  அந்த விழாக்களில் பல பாஜக தலைவர்கள் காந்தி ஆர் எஸ் எஸ் ஐ புகழ்ந்ததாகக் கூறி வருகின்றனர்.   இது குறித்து தி டெலிகிராஃப் ஊடகத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை ராமச்சந்திர குகா வெளியிட்டுள்ளார்.

அக்கட்டுரையின் முதல் பகுதி இதோ :

மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.  முன்னாள் அர் எஸ் எஸ் த்ண்ட்ர் தற்போது இந்தியப் பிரதமராக இருக்கும் போது இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.   அந்த விழாக்களில் பிரதமரும் மற்றவர்களும் காந்தி ஆர் எஸ் எஸ் உடன் இணைந்து செயல்பட்டதாகத் தெரிவித்து  வருகின்றனர்.  ஆகவே தற்போது அவர் உயிருடன் இருந்த போது ஆர் எஸ் எஸ் உடன் இருந்த உறவு குறித்து நாம் உண்மையைக் காண வேண்டியது அவசியம் ஆகிறது.

நாம் முதலில் காண வேண்டியது கடந்த 1947 ஆம் வருடம் ஏப்ரல் மாத நிகழ்வாகும்.  ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி, “நான் குரான்  மற்றும் பகவத்கீதையில் காணப்படும் ஒற்றுமைகளைக் கூறி இந்து மற்றும் இஸ்லாமியக் கோட்பாடுகள் ஒன்றே ஆகும் என தெரிவித்தேன்.   அதற்கு ஆர் எஸ் எஸ் மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.   நான் இவ்வாறு மறுப்பு வருவதற்கு மகிழ்கிறேன்.  அனைத்து விவகாரமும் வெளிப்படையாக நடக்கும் போது தான் வாழ்க்கை மட்டும் இன்றி ஆன்மீகமும் காப்பாற்றப்படும்” எனத் தெரிவித்தர்.

அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தி ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் அடக்கிய ஒரு குழுவை டில்லியில் சந்தித்தார்.   அப்போது அவர், “ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் சுய தியாகம், மற்றும் அறிவாற்றலால் பல பயனுள்ள பணிகளைச் செய்து வருகின்றனர்.  ஆர் எஸ் எஸ் இயக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்பதை நான் கேள்விப்பட்டேன்.  இந்து மதம் மட்டுமே ஒரே மதம் கிடையாது.  எனவே இந்துக்கள் இஸ்லாமியர்களுடன் விரோதம் கொள்ள வேண்டாம்.  இந்திய தேசத்துக்கு மட்டுமே ஆர் எஸ் எஸ் தனது பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.  அதற்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது” எனத தெரிவித்தார்.

காந்தி இந்த அமைப்பின் மீது பாசம் கொண்டிருந்த அதே நேரம் அமைப்பினர் அவருக்கு எதிராக இருந்தனர்.  கொல்கத்தாவில் 19947 ஆம் வருடம் காந்தி இந்து முஸ்லிம் கலவரத்தை நிறுத்த உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  அப்போது ஆர் எஸ் எஸ் ஏடான ஆர்கனைசர் அதை ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிக்கிறார் என வர்ணித்தது.

மேலும், “நமது கண் முன்னால் சரித்திரம் மீண்டும் நடைபெறுகிறது.  கல்கத்தாவில் மகாத்மா காந்தி இஸ்லாமியர்களைப் புகழ்ந்து இந்துக்களை அல்லா ஹூ அக்பர்  எனக் கோஷமிட சொல்லுகிறார்.   ஆனால் பஞ்சாப் மற்றும் உள்ள பகுதிகளில் பல காட்டுமிராண்டி தாக்குதல்கள் இந்துக்கள் மீது இஸ்லாம்  பெயரால் நடத்தப்பட்டு அவர்கள் அல்லா ஹூ அக்பர் கோஷமிடுகின்றனர்” எனத் தெரிவித்தது.

உண்மையில் காந்தியின் உண்ணாவிரதம் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் ஆகிய இருவரையும் வெட்கமடைய வைத்தது.   சுமார் 77 வயதான முதியவர் தனது அகிம்சையின் மூலம் சண்டையிடும் இரு குழுவினரை ஒன்று பட வைத்துள்ளார்.  அதன் பிறகும் காந்தி தனது அமைதி முயற்சியைக் கைவிடவில்லை.   பீதி அடைந்துள்ள  டில்லி இஸ்லாமியர்கள்  பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்க அவர் டில்லி விரைந்தார்.

(இந்த கட்டுரையின் அடுத்த  பாகம் விரைவில்)