மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் சென்னையில் காலமானார்

சென்னை:
காத்மா காந்தியின் கடைசி தனிச்செயலராக பணியாற்றிய வி.கல்யாணம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 99. வயது மூப்பின் காரணமாக அவர் காலமாகி உள்ளார். மாலை 3.30 மணி அளவில் பாதூரில் உள்ள அவரது வீட்டில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

பெசன்ட் நகரில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1922இல் ஆகஸ்ட் 15 அன்று ஷிம்லாவில் பிறந்துள்ளார் அவர். 1944 முதல் 1948 வரை மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்துள்ளார் கல்யாணம். இதனை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய குமரி எஸ். நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

காந்தியுடன் சேவாகிராம் ஆசிரமத்தில் பல மொழிகளில் கடிதங்களை தொகுத்து எழுத அவருக்கு கல்யாணம் உதவியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.